[tiruvallur] - காதலர் தினத்தில் சோகம் மின்சார ரயிலில் சிக்கி பிளஸ் 2 மாணவி பலி: காதலனிடம் விசாரணை

  |   Tiruvallurnews

கும்மிடிப்பூண்டி, பிப்.15: கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே பன்பாக்கம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஆர்.ஷர்மிளா (17) மின்சார ரயிலில் அடிபட்டு நேற்று மாலை உயிரிழந்தார். இவர், கவரப்பேட்டை அரசு பள்ளியில் படித்து வந்தார். சிற்றரசூர் பகுதியை சேர்ந்த ஐடிஐ மாணவர் அஜீத் (18). இவரது உறவினர் வீடு மாணவி ஷர்மிளாவின் வீட்டிற்கு அருகில் உள்ளது. அங்கு அஜீத் அடிக்கடி சென்று வந்த நிலையில் அவருக்கும் மாணவி ஷர்மிளாவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது.காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று ஷர்மிளா பள்ளி சீருடையில் பள்ளிக்கு செல்லாமல் காதலன் அஜீத்துடன் பொன்னேரியில் சினிமா தியேட்டருக்கு சென்றுவிட்டு, கவரப்பேட்டைக்கு ரயிலில் வந்துள்ளார். பிறகு இருவரும் கவரப்பேட்டை ரயில்நிலையத்தில் இருந்து ரயில் பாதை வழியாக 2 கி.மீ தூரம் பன்பாக்கத்திற்கு நடந்து வந்துள்ளனர்.

அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும், சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கும் மின்சார ரயில்கள் வந்துள்ளன. எதிர்பாராதவிதமாக கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த மின்சார ரயிலில் ஷர்மிளா அடிபட்டு இறந்துள்ளார்.இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மாணவியுடன் வந்த அஜீத்தை பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வந்து மாணவி ஷர்மிளாவின் உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், இரு பக்கமும் ரயில் வருவதை கண்டு தான் ரயில் பாதையை விட்டு இறங்கி விட்டதாகவும், ஷர்மிளா ரயிலை கவனிக்காததால் அடிபட்டு இறந்து விட்டதாகவும் அஜீத் கூறி உள்ளார். உண்மையிலேயே ஷர்மிளா ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது அஜீத் ஷர்மிளா இடையே தகராறு ஏற்பட்டு கோபத்தில் ஷர்மிளாவை ரயிலில் தள்ளி விட்டாரா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/SgvrIQAA

📲 Get Tiruvallurnews on Whatsapp 💬