[tiruvallur] - தாலி கட்டிய கணவரான மீன் வியாபாரிக்கு துரோகம் கள்ளச்சாவி போட்டு சொந்த வீட்டிலேயே கொள்ளையடித்த மனைவி கைது

  |   Tiruvallurnews

சென்னை, பிப். 15: சென்னை கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (40), மீன் வியாபாரி. இவர் மனைவி தேவி (38)யுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லையாம். பாஸ்கர் அதிகாலைமீன் வியாபாரத்திற்கு சென்று விட்டு இரவு வீடு வருவது வழக்கம். இதற்கிடையே, அதே பகுதியை சேர்ந்த பாஸ்கருடன் மீன் வியாபாரம் செய்யும் அவரது நண்பர் அர்ஜூனன் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் பாஸ்கர் வீட்டில் இல்லாத போது அர்ஜூனனுடன் தேவி நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.இதை அறிந்த பாஸ்கர் பலமுறை கண்டித்தும் தேவி அர்ஜூனனுடனான கள்ளக்காதலை கைவிடவில்லை. பிறகு பாஸ்கர் மனைவியை வீட்டை விட்டு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. தேவி தற்போது கள்ளக்காதலனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், பாஸ்கர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு மீன் வியாபாரத்திற்கு சென்று விட்டார். இதை பார்த்த தேவி, கள்ளக்காதலனுடன் கணவர் வீட்டிற்கு வந்து, போலி சாவி மூலம் வீட்டை திறந்து, பீரோவில் ைவத்திருந்த 25 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்த பின் மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.வியாபாரம் முடிந்து மதியம் பாஸ்கர் வீட்டிற்கு வந்தபோது, பீரோ அருகே துணிகள் சிதறி கிடந்தன. பீரோவை திறந்து பார்த்த போது 25 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பாஸ்கர் வீட்டிற்கு தேவி கள்ளக்காதலனுடன் வந்து சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர். போலீசார் தேவியை பிடித்து விசாரித்தனர். அப்போது, கள்ளக்காதலனுடன் சேர்ந்து நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். போலீசார் தேவி மற்றும் கள்ளக்காதலன் அர்ஜூனனைகைது ெசய்தனர். நகை மற்றும் பணத்தைபறிமுதல் ெசய்தனர். சொந்த வீட்டிலேயே பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொள்ளையடித்த சம்பவம் கோட்டூர்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/unN_VQAA

📲 Get Tiruvallurnews on Whatsapp 💬