[tiruvallur] - பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையுடன் நாளுக்குநாள் அதிகரிக்கும் ஏரி ஆக்கிரமிப்பு

  |   Tiruvallurnews

ஆவடி, பிப். 15: திருமுல்லைவாயல் அரபாத் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பாளர்கள் பிளாட் போட்டு விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச். சாலையை ஒட்டி சுமார் 65 ஏக்கர் பரப்பளவிலான அரபாத் ஏரி உள்ளது. ஏரியை சுற்றிலும் மணிகண்டபுரம், சரவணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு இந்த ஏரி குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. நாளடைவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியை பராமரிக்காததால், குப்பை கழிவுகள் கலந்து ஏரி நீர் குடிக்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஏரியை படிப்படியாக சமூக விரோதிகள் ஆக்கிரமித்து, பிளாட் போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்காமல் பொதுப்பணி துறை அதிகாரிகளும் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதன் விளைவாக ஏரியின் பரப்பளவு சுமார் 20 ஏக்கர் வரை தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, சுற்றிலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் என குடியிருப்பு பகுதியாக உருமாறி நிற்கிறது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/VH0eeQAA

📲 Get Tiruvallurnews on Whatsapp 💬