[tiruvallur] - பொருட்கள் வாங்காமலே வாங்கியதாக ‘மெசேஜ்’ ரேஷன் கடைகளில் முறைகேடு: திமுக ஊராட்சி சபையில் மக்கள் புகார்

  |   Tiruvallurnews

ஊத்துக்கோட்டை, பிப்.15: ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காமலேயே வாங்கியது போல் “மெசேஜ்” வருவதாக எல்லாபுரம் தெற்கு ஒன்றியத்தில் நடந்த திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் மக்கள் சரமாரியாக புகார் கூறினர்.பெரியபாளையம் அருகே எல்லாபுரம் தெற்கு ஒன்றியத்தில் காதர்வேடு, புன்னப்பாக்கம், அத்தங்கி காவனூர், அழிஞ்சிவாக்கம், ஆலப்பாக்கம், அத்திவாக்கம், கிளாம்பாக்கம், பாகல்மேடு ஆகிய 8 ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு தலைமை தாங்கினார், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் பாஸ்கரன், தங்கம் முரளி, மாவட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், சம்பத், இளைஞரணி அமைப்பாளர் குமார் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலாளர்கள் சம்பத், செல்லப்பன், முருகன், நாகரத்தினம், கோவிந்தராஜ், பாஸ்கர், செல்வராஜ், எஸ்.கோவிந்தராஜ் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு கலந்துகொண்டனர்.அப்போது பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் நடக்கும் நூறு நாள் வேலையில் சரிவர கூலி தருவது இல்லை, காஸ் விலை உயர்ந்து விட்டது. ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காமலேயே வாங்கி விட்டதாக ‘மெசேஜ்’ வருகிறது. ரேஷனில் புழுங்கல் அரிசிக்கு பதில் பச்சரிசி போடுகிறார்கள். கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலைய வசதி கொண்டுவர வேண்டும். ஏழை மக்கள் விழா நடத்த சமுதாய கூடம் வேண்டும் என்றனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/0wK6mwAA

📲 Get Tiruvallurnews on Whatsapp 💬