[tiruvallur] - மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை பெற விஏஓ அலுவலகங்களில் குவியும் சிறு,குறு விவசாயிகள்: கணக்கெடுப்பு பணி தீவிரம்

  |   Tiruvallurnews

திருவள்ளூர், பிப். 15: மத்திய அரசு அறிவித்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகள் கணக்கெடுப்பு விஏஓ அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டிலேயே இத் திட்டம் தொடங்கப்படுவதால், பயனாளிகள் விவரம் சேகரிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்கு முன்பாக, பயனாளிகள் பட்டியலை இறுதி செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இதுகுறித்து விஏஓக்கள் கூறுகையில், ‘நன்செய் நிலமாக இருப்பின் 2.5 ஏக்கர், புன்செய் நிலமாக இருப்பின் 5 ஏக்கருக்கு மிகாமல் இருப்பவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இத்தகைய சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து அவர்களது நிலத்துக்கான சிட்டா நகல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல், புகைப்படம் ஆகியவை இணைக்கப்பட்ட விண்ணப்பம் பெறப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை, அன்றைய தினமே வருவாய் ஆய்வாளர் மூலமாக தாலுகா அலுவலகத்துக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தினமும் பெறப்படும் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு வருவாய் ஆய்வாளர்கள் மூலமாக தாலுகா அலுவலகத்துக்கு பட்டியல் அனுப்பப்படுகிறது. தற்போது தினமும் ஒவ்வொரு விஏஓ அலுவலகத்திலும் குறைந்தது 50 விண்ணப்பங்களுக்கு மேல் பெறப்படுகிறது’’ என்றனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/s8UzfgAA

📲 Get Tiruvallurnews on Whatsapp 💬