[viluppuram] - அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: பயணிகள் அதிர்ச்சி

  |   Viluppuramnews

திருக்கோவிலூர், பிப். 15: பழைய மற்றும் புதிதாக விடப்பட்டுள்ள அரசு பேருந்துகளில் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் என ஸ்டிக்கர்களை ஓட்டி அதிக கட்டணம் வசூல் செய்வதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பயணிகள், கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பேருந்து கட்டணம் பயண தூரம் அடிப்படையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயண தூரம் அடிப்படையில் கணக்கீட்டு முறையாக இந்த கட்டண உயர்வை கடைப்பிக்காமல் சில பகுதிகளுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களிடம் வசூல் செய்து வருகின்றனர்.குறிப்பாக அரசு பேருந்துகளில், நகர பேருந்து முதல் அருகில் இருக்கும் பெரு நகரங்கள், வெகு தொலைவில் உள்ள நகரங்கள், வெளி மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகளில் எல்எஸ்எஸ், எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் என பெயர்களை வைத்துக்கொண்டு செல்லும் பேருந்துகளில் கடந்த ஒருவார காலமாக இந்த கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/f1BNugAA

📲 Get Viluppuramnews on Whatsapp 💬