🏛தமிழக அரசின் 💸பட்ஜெட் தாக்கல் விவரம் இதோ📜

  |   Tamil News B

✍இளவேனில்🌄

📆2019-2020ம் ஆண்டிற்கான 🏛தமிழக 💸பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான 💺ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்👍. அதன் விவரம் இதோ👇

🌾விவசாயிகளுக்கான சலுகைகள்
🔰விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன், 2,000 சூரிய பம்ப் செட்டுகள் வழகங்ப்படும். பயிர்க்கடன் மீதான வட்டி தள்ளுபடிக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு. பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.235 கோடி ஒதுக்கீடு.
💦நீர்நிலைகள்
🔰மக்கள் பங்களிப்புடன் ஏரிகளை புணரமைக்க ரூ.300 கோடி. நகராட்சித்துறை, குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி. ரூ.284 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் பங்களிப்புடன் ஏரிகளை புணரமைக்க ரூ.300 கோடி.
🏗கட்டிடமைப்பு திட்டங்கள்
🔰ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டப்படும். சென்னையில் ஆற்றோரம் வசிப்போருக்கு 38,000 வீடுகள் கட்ட திட்டம். நில ஆதாரங்களை முறையாக திறம்பட பயன்படுத்த மாநில நலப்பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்படும். தேசிய ஊராக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.349.4 கோடி ஒதுக்கீடு. வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு ரூ.6,265.5 கோடி ஒதுக்கீடு. கல்வித்துறை
🔰பள்ளி கல்வித்துறைக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு. பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது. இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு. முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு.
போக்குவரத்து
🔰ஜெர்மன் வங்கி உதவியுடன் 2,000 பேட்டரி பேருந்துகள் வாங்கி இயக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் மாதவரம் - கோயம்பேடு - சோழிங்கநல்லூர் திட்டத்திற்கு ஜப்பான் நிதியுதவி.
📜இதர திட்டங்கள்
🔰முத்திரைத்தாள், பத்திரப்பதிவு கட்டணம் மூலம் வருவாய் ரூ.13,122.81 கோடி
🔰தமிழக அரசின் வருவாய் செலவினம் ரூ.2,12,035.93 கோடி, வருவாய் பற்றாக்குறை ரூ.14,314.76 கோடி. தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.141 கோடி ஒதுக்கீடு
🔰நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு. கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு 1170.56 கோடி ஒதுக்கீடு.
🔰முதியோர் உதவித்தொகை, இலவச வேட்டி, வேலை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.3,958 கோடி ஒதுக்கீடு
🔰வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு மொத்தம் ரூ.1,031.5 கோடி ஒதுக்கீடு. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் 7,896-ல் இருந்து 5,198 ஆக குறைப்பு
🔰மத்திய அரசு ரூ.3,201 கோடி வழங்கவில்லை என்று பட்ஜெட்டில் ஓ.பி.எஸ். புகார்

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬