மதமாற்றத்திற்கு எதிர்ப்பு😡 தெரிவித்த பாமக 👨பிரமுகர் கொலை😱-👥5 பேர் கைது⛓

  |   Tamil News B

✍இளவேனில்🌄

🏛கும்பகோணம் பகுதி திருபுவனத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் 👨ராமலிங்கம் என்பவர் சில தினங்களுக்க்கு முன்பு, பாக்கியநாதன் தோப்பு என்ற பகுதிக்கு சென்ற அவர், மதமாற்றம் செய்யும் குழு ஒன்றுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் 📆பிப்ரவரி 5ம் தேதி இரவு, அவர் 🏠வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில், வழிமறித்த மர்மநபர்கள் சிலர் ராமலிங்கத்தின் இரண்டு கைகளையும் வெட்டிவிட்டு😳 தப்பிச் சென்றுவிட்டனர். அதிகமாக ரத்தம் வெளியேறியதால் 🏥மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் மரணம் அடைந்து விட்டார்😟. இந்நிலையில், கொலையாளிகளை கைது⛓ செய்யாவிட்டால் இறுதி காரியங்கள் செய்யமாட்டோம் என்று கூறி அவரின் குடும்பத்தினர் போராட்டம்💪 நடத்தினர்.
இந்தநிலையில் ராமலிங்கம் மகன் ஷாம்சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது👍. அவர்கள் 👥5 நபர்களிடம் தொடர் விசாரணை🗣 நடத்திய பிறகு இன்று திருவிடைமருதுார் பகுதியைச் சேர்ந்த அஸாருதீன்,குறிச்சி மலையைச் சேர்ந்த முகம்மது ரியாஸ்,திருபுவனம் பகுதியைச் சேர்ந்த சர்புத்தீன்,முகம்மது ரிஸ்வான், நிஜாம் அலி ஆகியோரை கைது⛓ செய்து, 🏛ஜேஎம் 1 நீதிமன்றத்தில் நீதிபதி கோதண்டராஜீ முன் அவர்கள் ஆஜர்படுத்தினர். அவர் வரும் 📆22ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்⚖ என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬