வைகை அணை 💦நீர்மட்டம் சரிவு-🏛5 மாவட்டங்களில் 🚰குடிநீர் தட்டுப்பாடு அபாயம்😨

  |   Tamil News B

✍இளவேனில்🌄
🌊வைகை அணைக்கு மேகமலை, சுருளிமலை, வெள்ளிமலை, அரசரடி, வாலிப்பாறை, சதுரகிரி உள்ளிட்ட மேற்குதொடர்ச்சி மலையில் இருந்து நீர்வரத்து உள்ளது. கடந்த பல வருடங்களாக 💦நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய ☔மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு 💦தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு ஓரளவு வந்தது. இதன் மூலம் தேனி மற்றும் மதுரை 🏛மாவட்ட 👥மக்களின் 🚰குடிநீர் தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ காற்றினால் நல்ல ☔மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தது⏫. இதனால் அணையின் மொத்த கொள்ளளவான 70 அடியில் 69 அடியை எட்டி👍, வினாடிக்கு⌚ 3,333 கனஅடி உபரிநீர் 🌾பாசனத்திற்காகவும், 🚰குடிநீருக்காகவும், 👥58 கிராம பாசன கால்வாயிலும் திறக்கப்பட்டது😯. இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை, கஜா புயலாலும் அணையின் 💦நீர்பிடிப்பு பகுதியில் நல்ல ☔மழை பெய்ததால் வைகை அணை மீண்டும் 69 அடியை எட்டி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 🏛3 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது😐. அதன் பின் மீண்டும் மழை ஏதும் இல்லாததால் நீர்மட்டம் சரிவடைந்தது😟. கோடை🌞 காலம் ஆரம்பிக்கும் முன்னே வைகை 🌊அணையின் நீர்மட்டம் சரிந்து⏬ வருவதால், மதுரை, தேனி, ராமநாதபுரம் உட்பட 🏛5 மாவட்டங்களில் 🚰குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்😱 உள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬