[tamil-nadu] - குமரி அருகே நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து... தீயை அணைக்கும் பணி தீவிரம்

குளித்துறை: கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதி அருகே இது அமைந்திருப்பதால் அதை அகற்ற தொடர்ந்து அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குப்பை கிடங்கில் அவ்வப்போது தீ விபத்து நிகழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குளித்துறை நடராட்சிக்குட்பட்ட 21 வாட்டுகளுக்கு உட்பட்ட குப்பைகள் அனைத்தும் இங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் கடந்த 3 மணி நேரத்திற்கு முன்பாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்த குளித்துறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடை வெயில் சுட்டெரிக்கும் காரணத்தாலும், குப்பைகளை மொத்தமாக தரம் பிரிக்காமல் கொட்டப்படுவதாலும் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து தக்கலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நகராட்சி தண்ணீர் வாகனம் மூலமும் தீயணைப்பு பணியானது நடைபெற்று வருகிறது. மேலும் அருகில் இருக்கும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

போட்டோ - http://v.duta.us/HK7YIAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/M5rvtQAA