[tamil-nadu] - கொளுத்தும் கோடை வெயில்; மண்பானை விற்பனை ஜோர் : பைப் பொருத்திய பானைகளுக்கு மவுசு

சேலம்: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது. இதில் பைப் பொருத்திய மண் பானைகள் மக்களின் கவனம் ஈர்த்து வருகிறது. கோடை தொடங்குவதற்கு முன்பே கடந்த 15ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அனல் காற்று வீசியது. இதனால் இம்மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக வெள்ளிரிக்காய், இளநீர், கரும்புசாறு, மற்றும் பழச்சாறு போன்றவற்றின் விற்பனை அதிகமாக இருந்தது.

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல வழிகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக மண்பானை விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் மண்பானை மட்டுமே விற்பனை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள் பிளாஸ்டிக் பைப் பொருத்திய மண்பானை விற்பனைக்கு வைத்துள்ளனர். இந்த வகை மண்பானை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பபை பெற்றுள்ளது. இது குறித்து மண்பானை விற்பனையாளர்கள் கூறுகையில், ‘‘வழக்கமாக மார்ச் இரண்டாவது வாரத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் அடிக்கடி குடிநீர் அருந்துகின்றனர்....

போட்டோ - http://v.duta.us/jUP8cAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/ejaLygAA