[tamil-nadu] - சுட்டெரிக்கும் வெயிலால் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை ஜோர்

கோவில்பட்டி: கோவில்பட்டி நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கே தயங்கி வருகின்றனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நகரில் தினசரி மார்க்கெட், மெயின்ரோடு, எட்டயபுரம் மெயின்ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் தர்ப்பூசணி பழங்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் வியாபாரிகள், மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் தர்ப்பூசணி பழங்களை விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

மேலும் தர்ப்பூசணி பழங்களை உண்பதன் மூலம் உடல் வெப்பத்தை தணிக்கும் மருத்துவ தன்மை உள்ளதால் இப்பழங்களுக்கு தற்போது நகரில் மவுசு அதிகரித்துள்ளது. மேலும் இப்பழங்கள் திண்டிவனம் பகுதி மற்றும் கோவில்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கோவில்பட்டி நகருக்கு லாரிகள், வேன்கள் மூலமாக மொத்தமாக வந்து குவிந்துள்ளன. ஒரு கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

போட்டோ - http://v.duta.us/UhW0agAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/sE4HtgAA