[tamil-nadu] - சித்திரை திருவிழா நடைபெறுவதால் மதுரையில் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயார்; மாவட்ட ஆட்சியர் பேட்டி

மதுரை: மதுரை மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணியில் பறக்கும் படைகள் ஈடுபட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார். நடத்தை விதிமீறல் பற்றி 1950 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சித்திரை திருவிழாவுக்காக மதுரையில் ஏப்ரல் 19-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று ஆட்சியர் நடராஜன் அறிவித்துள்ளார்.

மேலும் மதுரை தொகுதியில் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயார் என்றும், எந்த இடங்களில் தேவைப்படுமோ அங்கு வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயார் என்று என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மக்களைவை தேர்தல்

17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு

நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதில், தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது....

போட்டோ - http://v.duta.us/6O6w6wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/Y8oCpgAA