[tamil-nadu] - தேர்தல் நடத்தைகள் விதிகள் அமல்; திருவாரூரில் 50 லட்சம்; ஆலங்குளம் அருகே ரூ.20 லட்சம் பறிமுதல்

நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அடுத்த அத்தியூத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.20 லட்சம் பறிமுதல் செய்து பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடியில் இருந்து செங்கோட்டைக்கு காரில் பணம் எடுத்து சென்றது குறித்து சங்கர் ராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

இதில், தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 16வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்....

போட்டோ - http://v.duta.us/7tjaMgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/8hKRuwAA