[tamil-nadu] - திருமயம் பகுதியில் கடும் வறட்சியால் அழிந்து வரும் கோடை விவசாயம் : நாளுக்கு நாள் குறையும் நிலத்தடி நீர்மட்டம்

திருமயம்: திருமயம், அரிமளம் பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கோடை விவசாயம் குறைந்தது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் நடவு செய்த ஒரு சில விவசாயிகளும் வேதனையடைந்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்கள் விவசாயத்தை வாழ்க்கையின் ஆதார தொழிலாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சி அப்பகுதி மக்களின் தினசரி வருமானத்தை பாதித்தோடு, கூலிக்கு வேலை தேடி வெளி ஊர்களுக்கு செல்லும் அவல நிலைக்கு சென்றுவிட்டது. இதனிடையே திருமயம், விராச்சிலை, குழிபிறை, கோனாபடட்டு, அரிமளம், கீழப் பனையூர், தாஞ்சூர், கல்லூர், கீழாநிலைக்கோட்டை, கே.புதுப்பட்டி உள்ளி ட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தற்போது கோடை கால நடவு பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கண்மாய், ஆறுகள் வறண்ட நிலையில் கிணறு பாசனத்தை மட்டு மே முழுமையாக நம்பி விவசாய பணியில் ஈடுபட்டு வருவதால் ஒவ்வொரு ஆண்டும் திருமயம், அரிமளம் பகுதியில் விவசாய நில பரப்புகள் விகிதம் குறை ந்து கொண்டே வருவதை காண முடிகிறது. இது பற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் கேட்ட போது, கடந்த சில வருடங்களாக எங்கள் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு வறட்சி நிலவி வருகிறது. இருந்த போதிலும் எங்களுக்கு வேறு தொழில் வசதிகள் ஏதும் இல்லா ததால் விவசாயத்தையே சார்ந்து இருக்க வேண்டி உள்ளது. தொடர்ச்சியாக கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பருவ மழை பெய்யாததால் எங்கள் பகுதியில் உள்ள அணைத்து ஏரி, குளம், ஆறுகள் நீரின்றி உள்ளது....

போட்டோ - http://v.duta.us/3ihoAAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/fVtP0wAA