[tamil-nadu] - பேராசிரியை நிர்மலா தேவியை நாளை ஆஜர்படுத்த வேண்டும்; காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: பேராசிரியை நிர்மலா தேவியை ஜாமீனில் விடுவிக்கக்கோரிய வழக்கில் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சமூக ஆர்வலர் சுகந்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் நிர்மலாவை நாளை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நிர்மலா தேவியை சிறையில் சந்தித்து சட்ட உதவிகளை வழங்க முடியவில்லை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்கள் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டதால் நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் மதுரை காமராஜர் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளதாக ஏப்ரல் 23ம் தேதி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் மிரட்டி தன்னிடம் வாக்குமூலம் பெற்றதாக நிர்மலா தேவி தெரிவித்திருந்தார்....

போட்டோ - http://v.duta.us/XA44ugAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/dW01WQAA