[tamil-nadu] - பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு: குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை...கோவை எஸ்.பி. பாண்டியராஜன் பேட்டி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக சதீஷ், சபரீஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். கைப்பற்றப்பட்ட செல்போன் மூலம் விசாரணை நடைபெற்றது. தேடப்பட்டு வரும் திருநாவுக்கரசு ஏற்கனவே ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தார். அதில், பல அரசியல் பிரமுகர்கள் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசரை கைது செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு, தனது 2-வது வீடியோவை வெளியிட்டார். அதில் பாலியல் விவகாரத்தில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் போலீசில் சரணடைய உள்ளதாக தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளி திருநாவுக்கரசு மீண்டும் நண்பர்களுடன் மதுபான விடுதியில் நடமாடுவது போன்ற வீடியோ வாட்ஸ்அப்பில் வெளிவந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசரை தனிப்படை போலீசார் மகினாம்பட்டு என்ற இடத்தில் கைது செய்தனர்....

போட்டோ - http://v.duta.us/hp1ZNwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/CBrBHAAA