[tamil-nadu] - மதுரை சித்திரை திருவிழாவில் 10 லட்சம் பேர் கூடும் நாளில் தேர்தல் சாத்தியமா? அதிர்ச்சியில் தென் மாவட்ட மக்கள்

மதுரை: தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்.18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடும் சித்திரை திருவிழா நாளில் தேர்தல் சாத்தியமா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சைவமும், வைணமும் இணைந்து கொண்டாடும் அற்புதத் திருவிழா மதுரை சித்திரை திருவிழா. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல், தசாவதாரம் என வரிசையாக 12 நாட்கள் வரை கொண்டாட்டங்கள் களை கட்டும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல் ஆகிய 4 நிகழ்ச்சிகள்தான் இந்த கொண்டாட்டங்களின் சிகரங்கள். இந்த ஆண்டு ஏப்.17ம் தேதி திருக்கல்யாணம், ஏப்ரல் 18ம் தேதி காலை மதுரை நகரின் மைய மாசி வீதிகளில் தேரோட்டம், அன்று இரவு எதிர்சேவை, அடுத்தநாள் 19ம் தேதி காலை வைகையாற்றில் கள்ளழகர் இறங்க உள்ளார். ஏப்.18ம் தேதி நடைபெறும் தேரோட்டத்தில் குறைந்தது 3 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள். அன்று இரவு எதிர்சேவையில் குறைந்தது 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள், இவர்களுடன் 19ம் தேதி வைகையில் இறங்கும் அழகரை தரிசிக்க மேலும் 5 லட்சம் பேர் 18ம் தேதி காலை முதலே மதுரையை நோக்கி படையெடுப்பார்கள்....

போட்டோ - http://v.duta.us/pjJ6FAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/5hSgMAAA