[tamil-nadu] - வெயிலுக்கு நீச்சல் குளத்தில் யானைகள் ஜில் குளியல்

கும்பகோணம்: கோடை வெயிலில் இருந்து தப்பிக்க கும்பகோணத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் உற்சாகமாக குளித்து வருகின்றன. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அசோக் என்பவர் அம்பிகா, சியாமளா என்ற 2 யானைகளை வளர்த்து வருகிறார். இந்த யானைகள் சினிமா சூட்டிங், திருமண நிகழ்ச்சிகள், கோயில் விழாக்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றன. இந்த யானைகள் ஓய்வாக இருக்கும் நேரத்தில் அரசலாற்றில் குளிப்பாற்றி அழைத்து வந்து தாராசுரத்தில் உள்ள இடத்தில் கட்டி வைத்து பராமரித்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஆறு, குளங்கள், வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டதால் யானைகள் ஆனந்தமாக குளிக்க முடியாமல் அவதிக்குள்ளானது. இதனால் 2 ஆண்டுகளுக்கு முன் ஆலையடி தெருவில் 500 சதுரடியில் நீச்சல் குளத்தை வெட்டி தரைதளம் அமைத்ததுடன் சுற்றிலும் கான்கிரீட் சுவரை அசோக் அமைத்தார். இதனால் தினம்தோறும் யானைகள் காலை, மாலை நேரங்களில் உற்சாகமாக குளித்து வருகிறது.

கும்பகோணம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தால் யானைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும். இதனால் தனியாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் தினம்தோறும் காலை, மாலை நேரங்களில் யானைகளை குளிப்பாட்டி வருகின்றனர். இதை கேள்விப்பட்டு மதுரை, சமயபுரம் போன்ற இடங்களில் உள்ள தனியாரால் வளர்க்கப்படும் யானைகளை கும்பகோணம் வழியாக செல்லும் போதும் அல்லது ஓய்வு நாட்களாக இருந்தால் அழைத்து வந்து குளிப்பாட்டி அழைத்து செல்கின்றனர்.

போட்டோ - http://v.duta.us/UOmAwAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/hHIvoQAA