[tamil-nadu] - வெயிலுக்கு வெடிக்கும் குடிநீர் பைப் : பல்லாயிரம் மக்கள் தாகத்தில் தவிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 30 கிராம பஞ்சாயத்துக்களில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சில கிராமங்கள் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாகவும், ஒரு சில கிராமங்கள் ஆழ்துளை கிணறுகள் மூலமாக குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வறட்சி காலங்களில் சில பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது. இதனைத் தடுக்க அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் பிச்சம்பட்டி, கோத்தலூத்து, அனுப்பபட்டி, மறவபட்டி, ஏத்தக்கோவில், மொட்டனூத்து, கன்னியப்ப பிள்ளைபட்டி, பாலகோம்பை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன் பெறும் வகையில் குன்னூர் வைகை ஆற்றில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டது.

அங்கிருந்து ராட்சத குழாய்கள் பூமிக்குள் பதிக்கப்பட்டு ஆங்காங்கே நீர் உந்து நிலையங்கள் மூலமாக குடிநீர் பிரித்து வழங்கி வருகின்றனர். ஆனால், குப்பாம்பட்டி பிரிவு நீர்உந்து நிலையத்திலிருந்து கன்னியப்பா பிள்ளைபட்டி வழியாக கொப்பையம்பட்டி, மொட்டனூத்து செல்லும் குன்னூர் கூட்டுக்குடிநீர் பைப் நாகலாறு ஓடை பாலத்தில் வெடித்து பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வழிந்து கீழே ஓடுகிறது. இதனால் இந்நீரை நம்பியுள்ள மக்கள், போதிய குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்....

போட்டோ - http://v.duta.us/He_5_QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/x0k3IAAA