[chennai] - பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை புகார்கள் சிபிஐக்கு மாற்றப்படும்: சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்

  |   Chennainews

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான அனைத்து புகார்களும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நக்கீரன் இதழ் மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இதையடுத்து, எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் தனது நற்பெயருக்கும், குடும்பத்திற்கும் களங்கம் ஏற்படுத்தியதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நக்கீரன் கோபாலுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.

மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத நிலையில் நக்கீரன் கோபால், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, இந்த வழக்கு ஏற்கனவே சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது....

போட்டோ - http://v.duta.us/u0FadQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/fAp2lwAA

📲 Get Chennainews on Whatsapp 💬