[coimbatore] - 71 வயதில் ட்ராபிக் கான்ஸ்டபிள், சமூக சேவகர் - கோவை ஜெயமணி அசத்தல்

  |   Coimbatorenews

கோயம்புத்தூர்- ஆனைக்கட்டி சாலையில் இருக்கிறது கணுவாய் சந்திப்பு. நகரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருந்தாலும் ட்ராபிக் மூச்சுமுட்டுகிறது. ட்ராபிக் சிக்னலும் இல்லை; சாலையை ஒருங்கிணைக்க போக்குவரத்து காவலரும் இல்லை. ஆனாலும் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் நிம்மதியாக சாலையில் பயணிக்கின்றனர். என்னவென்று பார்த்தால் கம்பீரமாக நிற்கிறார் கணுவாயைச் சேர்ந்த ஜெயமணி. 71 வயது, தூய்மையான சேலை, வெண்ணிற டாப், கையில் கிளவுஸ்.

தினந்தோறும் காலையில் 8 மணி முதல் 9.30 மணி வரை நீடிக்கும் ட்ராபிக்கை ஒற்றை ஆளாகக் கையாளுகிறார் ஜெயமணி. பயணிகள் சிலர் கையசைக்கின்றனர். சிலர் ஜெயமணியைப் பார்த்து புன்னகைத்தவாறே செல்கின்றனர்.

இதுகுறித்துப் பேசும் அவர், 'பல ஆண்டுகளாக நான் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். கணுவாய் ஜங்ஷனைக் கடந்துசெல்லும்போது பாதசாரிகளும் குழந்தைகளும் மிகுந்த சிரமப்படுவதைப் பார்ப்பேன். சிக்னல்கள் பொருத்தப்படாத தாலும் காவலர்கள் இல்லாததாலும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே வண்டி ஓட்டினர். இதனால் தினமும் காலையில் 8 மணிக்குப் போய் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தேன். போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது வேலை நேரம் 10 மணி வரை நீளும். முடிகிற போதெல்லாம் மாலையிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறேன்....

போட்டோ - http://v.duta.us/5bqo-wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/k9JhoQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬