[kanchipuran] - பேபி நகர், தரமணி பஸ் நிறுத்தங்களில் நடைமேம்பால ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதி

  |   Kanchipurannews

வேளச்சேரி, மார்ச் 20: சென்னை ராஜிவ் காந்தி சாலையில் அமைந்துள்ள பேபி நகர், தரமணி பேருந்து நிறுத்தங்களில் நடைமேம்பால பகுதியை வியாபாரிகள் ஆக்கிரமித்து விளம்பர பதாகைகளை வைப்பதாலும், வாகனங்கள் நிறுத்தி வைப்பதாலும் முதியோர் மற்றும் சிறுவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.தரமணி 100அடி சாலை வேளச்சேரி விஜயநகரில் தொடங்கி எஸ்ஆர்பி டூல்ஸ் பஸ் நிறுத்தம் அருகே ராஜிவ் காந்தி சாலையுடன் இணைகிறது. சுமார் 3.5 கிமீ நீளம் கொண்ட இந்த சாலையில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து பாதசாரிகள் சாலையை கடப்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. எனவே இந்த சாலையில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை பயணிகளிடையே எழுந்தது. இதையடுத்து பேபி நகர், தரமணி பேருந்து நிறுத்தங்கள் அருகே கடந்த ஓராண்டுக்கு முன்பாக நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது. மேலும் தற்போது தானியங்கி படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நடை மேம்பாலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சிறுவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. ஆனால் இந்த தானியங்கி படிக்கட்டுகளுக்கு செல்லும் வழியை சுற்றி அருகில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளின் பெயர் பலகைகள் வைத்திருப்பதாலும், பாதையை ஆக்கிரமித்து வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வைப்பதாலும், தானியங்கி படிக்கட்டுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. புதிதாக வருபவர்கள் நடை மேம்பாலத்துக்கு செல்ல வழி தெரியாமல் குழம்பும் நிலை உள்ளது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/RJXYxAAA

📲 Get Kanchipurannews on Whatsapp 💬