[tamil-nadu] - இன்று உலக சிட்டுக் குருவி தினம் : சிட்டுக்குருவிகளின் நண்பர்களான நாகர்கோவில் வியாபாரிகள்

நாகர்கோவில்: உலகில் பல நாடுகளில் உலக சிட்டுக்குருவி தினம் மார்ச் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. அழிந்து வரும் சிட்டுக் குருவியைப் பாதுகாக்கவும், நகர்ப்புறங்களில் வாழ்கின்ற பிற பறவைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நாள்கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கட்டுரைப் போட்டி,கவிதைப் போட்டி, வர்ணம் தீட்டும் போட்டி என பல போட்டிகளை மாணவர்கள், பொது மக்களிடம் நடத்துகின்றார்கள். சிட்டுக் குருவி எப்பொழுதும் மனித இனத்துடன் ஒன்றித்து வாழ்கின்ற பறவையாகும். சில இடங்களில் இதை ‘அடைக்கலாங்குருவி’ என அழைக்கின்றனர். மனிதர்களிடம் அடைக்கலம் தேடி வருகின்ற ஒரு அற்புதமான பறவை. நெருக்கமாக இருக்கின்ற மண்டிகள், சந்தைகள், கடைகள் ஆகிய இடங்களில் மனிதனுடன் ஒன்றிணைந்து வாழ்கின்ற பறவை. மனிதனுக்கு நன்மை செய்யும் சிட்டுக்குருவியைப் பாதுகாப்பது மிகத் தேவையாகும்.

இக்குருவியைப் பாதுகாக்கும் நோக்கத்தில் நாகர்கோவில் அப்டா சந்தையில் வியாபாரிகள் கூடுகளை அமைத்து சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றனர். 500க்கும் மேற்பட்ட குருவிகள் சந்தையில் உள்ளது. சிட்டுக்குருவிகள் குமரி மாவட்டத்தின் கிராமப்பகுதிகளிலும் நகர்புறங்களிலும் சிறிய எண்ணிக்கையில்காணப்படுகிறது. இவற்றின் எண்ணிக்கையை பெருக்கும் முயற்சியாக உலக சிட்டுக்குருவிதினத்தில் கூடுகள் வழங்கப்படுகிறது. பொதுவாக பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதுபோல சிட்டுக்குருவியின்எண்ணிக்கையும் குறைந்து இப்பறவையினம் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சூழியல் ஆர்வலர் டேவிட்சன் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் ஓடுகளால் கூரை அமைக்கப்பட்டபோது வீட்டுக் கூரைப்பகுதிகளில் உள்ள சந்து பொந்துகளில் சிட்டுக்குருவி கூடுகள் அமைத்து வாழ்ந்தன....

போட்டோ - http://v.duta.us/o60HBwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/MaHrRgAA