[tamil-nadu] - கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தரமற்ற குல்பி ஐஸ் விற்பனை அமோகம்: குழந்தைகள் உடல்நிலை பாதிக்கும் அபாயம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 108 டிகிரிக்கும் அதிகமாக வெயில் சுட்டெரித்தது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரை 105.6 டிகிரி வரை வெயில் அளவு பதிவாகியுள்ளது. கோடை காலம் தொடங்காத நிலையில் அடுத்து வர உள்ள கத்தரி வெயிலின் தாக்கம் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுத்துமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க இளநீர், மோர், ஜூஸ் வகைகள் விற்பனை அமோகமாக காணப்படும். குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் வகைகள் பலவித சுவைகளில் விற்பனை செய்யப்படும். வேலூரின் பல்வேறு இடங்களிலும் தரமற்ற குல்பி ஐஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குல்பி ஐஸ் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களின் தரம் குறித்து அறிந்துகொள்ள முடியாத நிலையில், அதனை வாங்கி ருசிப்பதால் பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்....

போட்டோ - http://v.duta.us/sLD_XQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/-5s7rAAA