[tamil-nadu] - திருவண்ணாமலையில் இன்று பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று காலை தொடங்கியது. இதையொட்டி கோயிலில் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த மாதம் (பங்குனி) பவுர்ணமி இன்று காலை 9.41 மணிக்கு தொடங்கி, நாளை (வியாழன்) காலை 7.28 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வர உகந்த நேரமாகும். இந்த தகவலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி பக்தர்கள் இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றனர். இரவு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பவுர்ணமி கிரிவலத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

போட்டோ - http://v.duta.us/2-4olgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/i_HPIwAA