[tamil-nadu] - தேர்வு அறைகளுக்குள் சர்க்கரை நோயுள்ள மாணவர்கள் சாக்லேட், பழங்கள் எடுத்து செல்ல அனுமதி கோரிய வழக்கு ; இஎஸ்ஐ மருத்துவர் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை : பொதுத்தேர்வு, போட்டி தேர்வு அறைகளுக்குள் சர்க்கரை நோய் பாதிப்பு மாணவர்கள் பரிசோதனை ஸ்டிரிப், மாத்திரைகள், சாக்லேட், பழங்கள், இன்சுலின் போன்றவற்றை எடுத்து செல்ல அனுமதி கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தேர்வு அறைக்குள் சர்க்கரை நோய்க்கு உதவும் பொருட்களை எடுத்து செல்ல 2017-ல் சிபிஎஸ்இ நிபந்தனைகளுடன் அறிக்கை வெளியிட்டது.

தேர்வு அறைகளுக்குள் சர்க்கரை நோயுள்ள மாணவர்கள் அவதி

40 வயது முடிவடையும் ஆசிரியர்களில் பலருக்கு சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், குடல் புண் நோய் ஆகியவை இருக்கும். தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளில் சிலருக்கும் சர்க்கரை நோய் இருக்கும்.

மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெல்ட் அணியக்கூடாது, ஷுக்கள் அணியக் கூடாது. என்றும் மாணவர்கள் தேர்வு அறைக்கு எதுவும் கொண்டு செல்லக்கூடாது என்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் மிகக்கடுமையாக இருக்கிறார்கள். இதனால் சர்க்கரை நோயுள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் சோர்வடைந்து பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆதலால் மாணவர்களால் சரியாக தேர்வு எழுத முடியாத நிலை உள்ளது. இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு சி.பி.எஸ்.இ. என்ற மத்திய கல்வி வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றிக்கை விடுத்துள்ளது. அதில் சர்க்கரை நோய் உள்ள மாணவர்கள், தேர்வின் போது சாக்லெட், தண்ணீர் உள்ளிட்ட தின்பண்டங்களை தேர்வு அறைக்கு கொண்டு செல்ல அனுதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது....

போட்டோ - http://v.duta.us/dRGLEgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/K5vq0gAA