[tamil-nadu] - பேரணாம்பட்டு அருகே மசிகம் ஆற்றில் மீண்டும் மணல் கடத்தல்

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே மசிகம் ஆற்றில் மீண்டும் மணல் கடத்தல் தொடங்கியுள்ளதாகவும், இதற்கு வருவாய் துறையினர் மற்றும் போலீசார் உடந்தை எனவும் விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். பேரணாம்பட்டு அடுத்த மதினாப்பள்ளி மலட்டாற்றில் இருந்து தினந்தோறும் டிப்பர் லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதை அறிந்த கிராமமக்கள் பலமுறை வருவாய்துறையினர், காவல் துறை, அரசின் உயர் அதிகாரிகள், கலெக்டர் உட்பட அனைவருக்கும் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் அரசியல் பின்னணியில் இந்த மணல்கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி பாலாற்றில் மணல் கொள்ளை நடந்ததை அம்பலப்படுத்தும் வகையில் விவசாய சங்கத்தினரும், மசிகம் கிராம மக்களும் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதையடுத்து சில நாட்களுக்கு மணல் கடத்தலை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில், மீண்டும் கடத்தல் கும்பல் மணல் கடத்த முயற்சி எடுப்பதை அறிந்த விவசாய சங்க மாவட்ட அமைப்பாளர் ராமதாஸ் உட்பட கிராம மக்கள் நேற்று முன்தினம் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் குமாரிடம் புகார் தெரிவித்தனர்....

போட்டோ - http://v.duta.us/2day-gAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/90RRUQAA