[tamil-nadu] - மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் கண்டித்து பொள்ளாச்சியில் கடையடைப்பு போராட்டம்

  • இயல்பு வாழ்க்கை முடங்கியது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை ஐகோர்ட் நீதிபதி கண்காணிப்பில் நடத்தக்கோரி பொள்ளாச்சியில் நேற்று நடந்த முழு கடையடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும், இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சியில் முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த இப்போராட்டத்தில் பொள்ளாச்சி நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. இதேபோல பொள்ளாச்சியில் உள்ள காந்தி தினசரி காய்கனி மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளும் திறக்கப்படவில்லை. பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டு வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதுதவிர ஆட்டோ ஓட்டுநர் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்ததால் கடையடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். போராட்டம் காரணமாக பொள்ளாச்சியில் ரூ.10 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது....

போட்டோ - http://v.duta.us/e_cvBwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/2MsfhwAA