[tamil-nadu] - கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது : தமிழக அரசு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையும், கல்லூரியின் பெயரையும் வெளியிட்டுள்ளார்.அதேபோல, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

இந்த செயல் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் எஸ்பி மீதும், உள்துறை செயலாளர் மீதும் வழக்கு பதிவு செய்யக் கோரி வக்கீல் ஏ.பி.சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அவர் தாக்கல் செய்த மனுவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிடக்கூடாது....

போட்டோ - http://v.duta.us/FpW-FQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/JFn49AAA