[tamil-nadu] - தண்ணீர் வராமல் வறண்டது கிரிக்கெட் மைதானமாக மாறிய வாலாஜாநகரம் பெரியகுளம்

அரியலூர்: வாலாஜாநகரம் பெரிகுளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டதால் கிரிக்கெட் மைதானமாக மாறி வருகிறது. எனவே குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரத்தில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டு இருக்கும். ஆனால் தற்போது இந்த குளம் வறண்டு வெற்று நிலம்போல் காணப்படுகிறது. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்துவிட்ட நிலையில் விடுமுறை விடப்பட்டதால் வாலாஜாநகரம் குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடி வருகின்றனர்.

ஏனென்றால் இக்குளத்துக்கு வரவேண்டிய வரத்து வாய்க்கால்களை அரசு அலுவலகங்களே ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். இப்பகுதியில் வருமான வரித்துறையினர் அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் முனைவோர் அலுவலக கட்டிடங்களை கட்டி வாலாஜாநகரம் குளத்துக்கு வரவேண்டிய தண்ணீரை வர முடியாமதவாறு தடுத்து சாலையில் திருப்பி விடப்பட்டாதால் இக்குளத்துக்கு தண்ணீர் வரவில்லை.

இதனால் பெரியகுளம் வறண்டு காணப்படுகிறது. கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும் குடிநீர் எங்கே கிடைக்கும் என்று பொதுமக்கள் அலைந்து வருகின்றனர். நீர்வழி பாதைகளை அரசே ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் யாரிடம் கிராம புகார் தெரிவிப்பது என்று தெரியமால் தவித்து வருகின்றனர். எனவே குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டோ - http://v.duta.us/UAWZDQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/yZERIAAA