[tamil-nadu] - தமிழகத்தில் பறக்கும் படையினர் அதிரடி வேட்டை : கோடி கணக்கில் ரொக்கம், மதுபாட்டில்கள் பறிமுதல்

புதுச்சேரி : தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் பல இடங்களில் பணம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே ரோந்து சென்ற போலீசார் 6 பைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். குரூஷுக்கம்பூத்தில் பாழடைந்த கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த 168 மதுப்பட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸ் நடத்திய விசாரணையில் தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்வதற்காக மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

தென்காசி அருகே வல்லத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.4.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் பூ வியாபாரி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.1.86 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி சோதனைச் சாவடியில் ஆய்வு செய்த பறக்கும் படையினர் 35 பண்டல்களில் எடுத்துச் சென்ற அதிமுககறை வேட்டிகளை கைப்பற்றியுள்ளனர்....

போட்டோ - http://v.duta.us/Y01xawAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/htCH5wAA