[tamil-nadu] - நீரின்றி பயிர்கள் கருகியதால் மாடுகளை விட்டு மேய்க்கும் அவலம் : விவசாயிகள் வேதனை

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அருகே பருவ மழை பொய்த்ததால் பயிர்கள் நீரின்றி கருகி வருகிறது. இதனால் அந்த பயிர்களை மாடுகளை விட்டு மேய்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் இறைவா? என்பது வள்ளலாரின் கூற்றாகும். மனிதர்களுக்கு உணவு தரக்கூடிய பயிர்கள் வாடுவதைக் கண்டு மனம் உருகி இப்பாடலைப் பாடி உள்ளார் வள்ளலார். ஆனால் இன்று தாது மணல் கொள்ளை, காடுகள் அழிப்பு, உள்ளிட்ட காரணங்களால், பருவத்திற்கு ஏற்ற மழை பொழியாமல் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றடைந்துள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கும் முன்பு, வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு பொதுமக்கள் வீதியில் வந்து போராட்டம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் காவேரிப்பாக்கம் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளை நம்பி நவரை பருவத்தில் நெல் மற்றும் வேர்க்கடலை உள்ளிட்டவைகளை விவசாயம் செய்துள்ளனர். தற்போது அறுவடை செய்யும் தருவாயில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், கஷ்டப்பட்டு சாகுபடி செய்த பயிரை மிகுந்த மனவேதனையுடன் மாடுகளை விட்டு மேய்த்து வருகின்றனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற பழமொழிக்கு ஏற்ப அறுவடை செய்யும் நேரத்தில் கருகியதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்....

போட்டோ - http://v.duta.us/6k-qkgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/bHWqKgAA