[tamil-nadu] - நெல்லையில் அனல் காற்றுடன் 102 டிகிரி வெப்பம் பதிவு

நெல்லை: நெல்லையில் மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. கடந்த வாரம் 103 டிகிரி பதிவாகியிருந்த நிலையில் நேற்றும் வெப்பம் 102.2 டிகிரியாக பதிவானது. நெல்லையில் மார்ச் மாத துவக்கம் முதலே வெயில் கொளுத்துகிறது. கடந்த வாரம் அதிகபட்சமாக 103 டிகிரி வரை வெப்ப பதிவு உயர்ந்தது. பின்னர் அது 99 டிகிரி வரை குறைந்தது. ஆயினும் வெப்ப தாக்கம் அதிகமாகவே உணரப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்ச வெப்ப பதிவு 102.2 டிகிரியாக உயர்ந்தது. பிற்பகலில் அனல் காற்றும் வீசியது.

இதனால் வாகனஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமப்பட்டனர். பிற்பகலில் பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. வெயில் காரணமாக வேட்பார்களின் பிரசாரம் டல் அடித்தது. குளிர்பானைங்கள் விற்பனை ஜோராக நடந்தது. இதனிடையே வெயில் அதிகரித்துள்ளதால் இளநீர், பதநீர் நுங்கு, தர்பூசணி வரத்தும் அதிகரித்துள்ளது. 3 தினங்களுக்கு அனல் காற்றுடன் வெயில் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேவேளையில் இரவில் வெப்பம் தணிந்து சற்று குளிர்நிலை காணப்படுகிறது.

போட்டோ - http://v.duta.us/wuKOlAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/hRYPHwAA