[tamil-nadu] - புயல் தாக்கி 128 நாட்களுக்கு மேலாகியும் நிவாரணம் கிடைக்காததால் அழியும் நிலையில் மீன்பிடி தொழில்

சேதுபாவாசத்திரம்: கஜா புயல் தாக்கி 128 நாட்களுக்கு மேலாகியும் நிவாரணம் கிடைக்காததால் அழிந்து போகும் நிலையில் மீன்பிடி தொழில் உள்ளதால் வெளிமாவட்டங்களுக்கு வேலைத்தேடி சேதுபாவாசத்திரம் பகுதி மீனவர்கள் செல்கின்றனர். கஜா புயல் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. இதில் ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகள், விசைப்படகுகள், பைபர் படகுகள் சேதமடைந்தன. பல படகுகள் அலையின் சீற்றத்தை தாக்கு பிடிக்க முடியாமல் கடலுக்குள் மூழ்கியது. மேலும் மீன்பிடி வலைகளும் சேதமடைந்தன. இதனால் மீனவர்களுக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த 128 நாட்களுக்கு மேலாக தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் வேலையிழந்தும், வாழ்வாதாரத்தை இழந்தும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியில் 247 விசைப்படகுகள் இருந்தன. இவற்றில் 54 படகுகள் பகுதி சேதமடைந்தன. 188 படகுகள் முழுமையாக சேதமடைந்தது. தமிழக அரசு பகுதி சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தது. முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது. பகுதி சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன் நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது. இதில் சில விசைப்படகு மீனவர்கள் கூடுதலாக செலவான தொகையை தங்கள் கையில் உள்ள பணத்தை போட்டு பகுதி சேதமடைந்த 54 படகுகளையும் பழுதுநீக்கி கடலுக்கு தொழிலுக்கு சென்று வருகின்றனர்....

போட்டோ - http://v.duta.us/v2BB0QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/tyBtnQAA