[tamil-nadu] - போலி பட்டா குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் பரிந்துரை

மதுரை: போலி பட்டா குறித்த புகார்கள் வந்தால் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போலி பட்டா குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்களுக்கு தலைமைச் செயலர் சுற்றறிக்கை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி பட்டா மோசடி தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது. மேலும் போலி பட்டா புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்களின் புகார் குறித்து விசாரித்து 6 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் போலி பட்டா தொடர்பாக புகார் வந்தால் அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்து இருந்தார்....

போட்டோ - http://v.duta.us/dM8H7QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/iOy3-AAA