[tamil-nadu] - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி மணிகண்டன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோரை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் கொடுக்க முன்வராத நிலையில், ஒருவர் மட்டும் தைரியத்துடன் நடந்தவை பற்றி தன்னுடைய வீட்டில் எடுத்துக்கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் தேவையான ஆதாரங்களை திரட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை அறிந்த பார் நாகராஜ், செந்தில், பாபு, வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர் புகார் கொடுத்த இளம்பெண்ணின் அண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்தே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தாக்குதலில் ஈடுபட்ட பார்நாகராஜ், செந்தில், பாபு, வசந்தகுமார் ஆகியோரை கைது செய்த போலீசார் ஜாமீனில் விடுவித்துள்ளனர். மேலும் பெண்களை மிரட்டி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பம் முதலே இந்த வழக்கில் சிக்காமல் தலைமறையாக இருந்து வந்த மணிகண்டன் கடந்த 13ம் தேதியன்று, ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தான்....

போட்டோ - http://v.duta.us/TqOLDQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/VDMMewAA