[tamil-nadu] - கரூரில் தம்பிதுரை மனு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கீடு காங். பெண் வேட்பாளரை தடுத்து நிறுத்திய போலீஸ்: செந்தில்பாலாஜியை தள்ளிவிட்ட டி.எஸ்.பி.

கரூர்: காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி அதிமுக வேட்பாளர் மனுதாக்கல் செய்தனர். இதனால், போலீசாருடன் காங்கிரசார் மற்றும் தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை நெஞ்சில் டி.எஸ்.பி. கைவைத்து தள்ளினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று கடைசி நாளாகும். ஒரே ேநரத்தில் பல வேட்பாளர்கள் வருவதை தடுக்க, ஒவ்வொருவருக்கும் வேட்பு மனுதாக்கலுக்கான நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு முற்பகல் 11-12 மணியும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு மதியம் 12-1 மணியும் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதன்படி, அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் தயாராக இருந்தனர்.

சரியாக 11.30 மணியளவில், அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் (சுகாதாரம்) மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வந்தனர். இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் படலம் 30 நிமிடத்தை தாண்டியும் நடந்து கொண்டிருந்தது. சரியாக 12 மணியளவில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி உட்பட பலர் அலுவலகத்துக்கு வந்தனர். அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்வதாக கேள்விப்பட்டதும் ஒரு அறையில் காத்திருந்தனர். 20 நிமிடம் காத்திருந்தபிறகு தேர்தல் நடத்தும் அலுவலர் அறையை நோக்கி வந்தனர். அப்போது போலீசார், அதிமுக மாற்று வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருக்கிறார், யாரும் உள்ளே போகக்கூடாது என தடுத்து நிறுத்தினர்....

போட்டோ - http://v.duta.us/I-GDWAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/wiO_xAAA