[tamil-nadu] - மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கு ஏடிஎஸ்பிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் கடமை தவறிய ஏடிஎஸ்பிக்கு ஒரு பிரிவில் 4 ஆண்டு, மற்றொரு பிரிவில் ஒரு ஆண்டு என சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டது. அந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் கடந்த 2007, மே 9ம் தேதி தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஊழியர்கள் கோபிநாத், வினோத், பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அட்டாக் பாண்டி உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த விடுதலையை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், ஊழியர் தரப்பிலும் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை, நீதிபதிகள் பி.எஸ்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் அமர்வில் நடந்து வந்தது. கடந்த 21ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ‘‘இவ்வழக்கில் குற்றவாளிகளான அட்டாக் பாண்டி, ஆரோக்கிய பிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையாபாண்டியன், சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 3 மாதத்தில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், இவ்வழக்கில் 17வது எதிரியான டிஎஸ்பி ராஜாராம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானிக்கிறது. அவருக்கான தண்டனை மார்ச் 25ல் அறிவிக்கப்படும்’’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கில் தொடர்புடைய ராஜாராம் (தற்போது ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றுள்ளார்) நேற்று காலை ஐகோர்ட் கிளையில் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்....

போட்டோ - http://v.duta.us/jP8xxgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/_s5VdAAA