[theni] - ஆண்டிபட்டி பெரியகுளம் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

  |   Theninews

ஆண்டிபட்டி, மார்ச் 26: ஆண்டிபட்டி,பெரியகுளம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக ஒன்றிய செயலாளர் ஏ.மகாராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரத்தில் அதிமுக, சுயேட்சை வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், நேற்று திமுக, மக்கள் நீதிமய்யம் கட்சி உட்பட நான்கு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக வேட்பாளர் ஏ.மகாராஜன் தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணகியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்பாளருடன் திமுக தேர்தல் பொறுப்பாளர் அப்பாவு, பணிக்குழு உறுப்பினர் செல்வேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் சந்திரன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் ஆகியோர் உடனிருந்தனர். திமுகவிற்கு மாற்று வேட்பாளராக கூடலூரைச் சேர்ந்த லோகன்துரை (46 ), மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பாலகிருஷ்ணன்(39), சுேயட்சை வேட்பாளர்கள் கலுசிவலிங்கம் (60), ரமேஷ்பாபு (66). அதிமுக மாற்று வேட்பாளர் செல்வராஜ் (62) வேட்புமனு தாக்கல் செய்தனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/DBGnSAAA

📲 Get Theninews on Whatsapp 💬