[theni] - தேர்தல் ஆணையம் கவனிக்குமா? அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் உங்கள் கடன்களை அடைப்போம்

  |   Theninews

வருசநாடு, மார்ச் 26: தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்தால், தனியார் நிறுவனங்களில் பெற்ற கடன்களை அடைப்பதாக பெண்களுக்கு அதிமுகவினர் வாக்குறுதி அளித்து வருவது கடமலை - மயிலை ஒன்றியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, தேவராஜ்நகர், மயிலாடும்பாறை, வருசநாடு போன்ற கிராம பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் பெண்கள் கடன் பெற்றுள்ளனர். இந்தக் கடன்களை அடைப்பதாக அதிமுக நிர்வாகிகள் தற்போது தூண்டில் போட்டு வருகின்றனர். நிறுவனத்தில் வாங்கப்பட்ட கடன் தொகை எவ்வளவு, கடன் வாங்கியவர் செல் நம்பர், ஆதார் நம்பர், குடும்ப அட்டை நகல் போன்றவை சேகரிக்கும் பணியில் அதிமுகவினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு வாக்களித்தால், உங்கள் கடன்கள் அனைத்தையும் அடைத்து விடுவோம் என்று கூறி பெண்களிடம் அதிமுகவினர் கேன்வாஸ் ெசய்து வருகின்றனர். வாக்களிக்க பணம் கொடுப்பது சட்டப்படி தவறு என்றாலும், அைதப்பற்றி கவலைப்படாமல் கடமலை - மயிலை ஒன்றியத்தில் அதிமுகவினர் தற்போதே, பணப்பட்டுவாடாவில் இறங்கியுள்ளனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/66mKTwAA

📲 Get Theninews on Whatsapp 💬