[theni] - தேவாரத்தில் தண்ணீர் தேடி தோட்டத்திற்கு வரும் காட்டுப்பன்றிகளால் பீதி

  |   Theninews

தேவாரம், மார்ச் 26: தேவாரம் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீரை தேடி காட்டுப்பன்றிகள் தோட்டங்களுக்கு வருவதால் விவசாயிகள் பீதியில் உள்ளனர். தேவாரம் மலையடிவாரம் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பெய்யக்கூடிய தென்மேற்கு, வடகிழக்கு, கோடை மழை காலங்களில் தேக்கி வைக்கக்கூடிய மழைநீரை கொண்டு விவசாயம் நடக்கிறது. தற்போது மழை இல்லாத நிலை உள்ளது. இதனால் வனவிலங்குகள் பெரும் திண்டாட்டம் அடைகின்றன. குறிப்பாக தென்னை, காய்கறிகள், கப்பை, பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுவது தொடர்கதையாகி வருகின்றன. தமிழக, கேரளா வனக்காடுகளின் வழியே இடம்பெயரக்கூடிய மான், காட்டுப்பன்றிகள், கேழையாடுகள் போன்றவை தண்ணீரின்றி தத்தளிக்கின்றன. மழை அதிகமில்லாத பகுதியாக தேவாரம் உள்ளது. அதிர்ஷ்டவசமாக பெய்யக்கூடிய மழையினால் விளையக்கூடிய பயிர்களை அறுவடை செய்ய விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென காடுகளில் இருந்து நிலப்பகுதிகளுக்குள் நுழையும் காட்டுப்பன்றிகள் எல்லா பயிர்களையும் ஒரே இரவில் துவம்சம் செய்துவிட்டு சாவகசமாக காடுகளுக்குள் நுழைந்து கொள்கின்றன....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/nK662QAA

📲 Get Theninews on Whatsapp 💬