[theni] - நேரம் முடிந்த பின் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக மாற்று வேட்பாளர்

  |   Theninews

தேனி, மார்ச் 26: தேனி மக்களவை தொகுதிக்கான அதிமுக மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்ய நேரம் கடந்து வந்த சையதுகான், தேர்தல் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மக்களவை தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். இவர் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அப்போது மாற்று வேட்பாளர் யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. அன்றைய தினம் வேட்பாளருடன் செல்ல மாவட்ட செயலாளர் சையது கான் சென்றபோது, வேட்பாளருடன் ஓபிஎஸ்சின் மைத்துனர் சென்றார். இதனால் மாற்றுவேட்பாளர் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்லவிடாமல் தடுத்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஓ.ப.ரவீந்திரநாத்குமாருக்கு மாற்று வேட்பாளராக வேட்புமனுத்தாக்கல் செய்ய தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் நேற்று மதியம் 3.02 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு வந்தார். அப்போது, வேட்புமனுத்தாக்கல் செய்யும் நேரம் கடந்து விட்டது எனக் கூறி வேட்புமனு வாங்க கலெக்டர் பல்லவி பல்தேவ் மறுத்து விட்டார். அப்போது சையதுகான் வாக்குவாதத்தில ஈடுபட்டார். ஆனாலும், சையதுகானை வேட்புமனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. இதனால் மனம்வெறுத்து மனு தாக்கல் செய்ய முடியாமல் திரும்பி சென்றார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/vjWlMQAA

📲 Get Theninews on Whatsapp 💬