[theni] - வறண்டு கிடக்கும் மூலவைகை கடமலை-மயிலையில் கடும் குடிநீர் பஞ்சம்

  |   Theninews

வருசநாடு, மார்ச் 26: கடமலை - மயிலை ஒன்றியத்தில் மூலவைகை ஆறு வறண்டு கிடப்பதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடமலை - மயிலை ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்டு 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த 18 ஊராட்சி மன்றங்களும் மூல வைகை ஆற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நீர்பிடிப்பு பகுதிகளான அரசரடி, வெள்ளிமலை, போன்ற பகுதிகளில் கோடை மழை பெய்யவில்லை. எனவே, இதனைத் தொடர்ந்து கடமலை - மயிலை ஒன்றியத்தில் குடிநீர் பஞ்சம் தற்போது நிலவி வருகிறது. இந்த நிலையில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை போன்ற பகுதிகளில் ஆழ்துளை கிணறு மூலம் தனியார் தோட்டங்களில் இருந்து தள்ளு வண்டிகளில் பொதுமக்கள் குடிநீர் எடுத்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் தனியார் தோட்டங்களிலும் ஆழ்துளைக் கிணறுகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படும் அபயாம் ஏற்பட்டுள்ளது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/exaX3gAA

📲 Get Theninews on Whatsapp 💬