🌱அதிமுக 🤝கூட்டணியில் புதிய நீதி கட்சி👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛நாடாளுமன்ற 🗳தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, 🌱அதிமுக தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை🗣 நடத்தி வந்தனர். நேற்று உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது😯. இதற்கிடையில் நேற்று இரவு ⌚8.50 மணிக்கு 🌱அதிமுக 🏢தலைமை அலுவலகத்துக்கு புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் சென்றார். அவரை முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்🙏. பின்னர் தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை🗣 நடத்தப்பட்டன. அதில், புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டன👍. அதைத் தொடர்ந்து துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி, ஏ.சி.சண்முகம் ஆகியோர் ✍ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 🌱அதிமுகவில் இதுவரை கூட்டணிக் கட்சிகளுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 🏛வேலூர் தொகுதியை ஏ.சி.சண்முகத்திற்கு ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது😳. ஏ.சி.சண்முகம் கடந்த முறை பாஜக 🤝கூட்டணியில் போட்டியிட்டார். இந்த முறை பாஜக இடம்பெற்றுள்ள 🌱அதிமுக 🤝கூட்டணியில், அக்கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுகிறார்😐 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬