எழும்பூர் அரசு தாய் சேய் நல 🏥மருத்துவமனையில் தமிழக 💺முதல்வர்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல 🏥மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ நல திட்டங்களை தொடங்கி🎉 வைத்த முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்கள், பணியாளர்களுக்கு பணி நியமன 📜ஆணையினையும் வழங்கினார். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்🎙, "தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைப்பது குறித்து மகிழ்ச்சி😍 கொள்கிறேன். இந்த திட்டத்தால் ஆண்டுக்கு சுமார் 👥6 லட்சம் கர்ப்பிணி தாய்மார்கள் பயன்பெறுவார்கள்👍" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "ஒரே 💻இணையதளம் மூலம் பிறப்பு மற்றும் 📜இறப்பு சான்றிதழ் பதிவிறக்கும் செய்து கொள்ளும் வகையில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு முறை மென்பொருளை 👥பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது👏. இதனால் மாநிலத்தில் எந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும் பிறப்பு, இறப்பு சான்றிதழை 💻கணினி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்றும் அறிவித்தார்🔈. மேலும் 🏛எழும்பூர் தாய் சேய் நல 🏥மருத்துவமனைக்கு புதிய 🏗கட்டடம் கட்டுவதற்காக, 💸15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்👍 என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬