[coimbatore] - நேசிக்க தவறிய உறவுகள்....

  |   Coimbatorenews

கமலாம்மாள், வயசு, 83 இருக்கும். கோவையில் இருந்து சிறுவாணி ரோட்டில், ஒரு கோவில் அருகே, ஆதரவின்றி, முடங்கிக் கிடந்தார். தவிக்கும் வாய்க்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்க ஆளில்லை. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள். வானில் மின்னும் நட்சத்திரங்களையும், நிலாவையும் காட்டி, ஆசை ஆசையாக சோறு ஊட்டி வளர்த்த மகளுக்கு வெகுவிமர்சையாக திருமணம் முடித்து, மாப்பிள்ளையோடு அனுப்பி வைத்தார்.கடைசி வரை காப்பாற்றுவான் என நம்பிய மகன், விபத்தில் உயிரிழந்து விட, கமலாம்மாளும், இவரது கணவர் மாதவனும், 85, தனித்துவிடப்பட்டனர்.

உதவிக்கரம் கொடுக்க யாருமின்றி, ரோட்டுக்கு வந்தனர். நாளடைவில் நோய்வாய்ப்பட்ட கமலாம்மாள், கோவில் அருகே முடங்கினார்.அவரை துாக்கிக் கொண்டு, அடைக்கலம் செல்ல போக்கிடம் இன்றி பரிதவித்தார், மாதவன். கால்போன போக்கில் முதியோர் முகாம் ஒன்றில் மாதவன் மட்டும் அடைக்கலம் ஆனார். கமலாம்மாளை பற்றிய விவரம், கோவை கெம்பட்டி காலனியில், மாநகராட்சி சமுதாய கூடத்தில் செயல்படும் 'ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ்' மையத்துக்கு தொலைபேசி வாயிலாக தெரியவந்தது.இந்த அமைப்பினர் விரைந்து சென்று, அவரை மீட்டு, தங்களது மையத்துக்கு அழைத்து வந்தனர்....

போட்டோ - http://v.duta.us/Hj7TEgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/G5IXFQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬