[coimbatore] - பகலில் தலைமை ஆசிரியர் இரவில் உடுக்கடி கலைஞர்!

  |   Coimbatorenews

உடுமலை காந்தி நகரைச் சேர்ந்த முனைவர் க.சீதாராமன்(49), தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர். இவரை வீட்டில் பார்ப்பது அரிது. பகல் நேரத்தில் பள்ளியில் சந்திக்கலாம். இரவில் என்றால், ஏதாவது ஒரு கிராமத்து ஓட்டு வீட்டில், தன் குழுவினருடன் அரிதாரம் பூசிக் கொண்டிருக்கும்போதுதான் அவரைக் காண முடியும். கொஞ்சம் தாமதித்தால், அந்த ஊரின் முக்கிய சந்திப்பில் உடுக்கடித்து கதை சொல்லிக் கொண்டிருப்பதை கேட்கலாம்.

தொன்றுதொட்டு நம் மக்களிடையே 250-க்கும் மேற்பட்ட கதைப் பாடல்கள் புழங்கி வந்துள்ளன. அவற்றில், காத்தவராயன் கதை, சுடலைமாடன் கதை, வள்ளித் திருமணம், சீதா கல்யாணம், கண்ணகி கோவலன் கதை, நல்லதங்காள் கதை என பல்வேறு கதைப் பாடல்களை உடுக்கடித்து பாடும் இவர், முனைவர் பட்டம் பெற்றது அண்ணன்மார் சுவாமி உடுக்கடி கதைப் பாடலில்தான். முனைவர் பட்டத்துடன் உடுக்கடி கதைப் பாடலைக் கைவிட்டுவிடாமல், அதையே சுவாசமாகக் கொண்டு கடந்த 20 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆயிரக்கணக்கான உடுக்கடி கதைப் பாடல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கிறார் சீதாராமன்....

போட்டோ - http://v.duta.us/Kag1pwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/HP_TDAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬