[tamil-nadu] - குமரி சிவன் கோயில்களில் விடிய, விடிய சிறப்பு பூஜை : திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகர்கோவில்: மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளுக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம் தாலுகா பகுதிகளில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களை மாலையணிந்து நோன்பிருந்து ஓட்டமும் நடையுமாக சென்று தரிசிக்கும் நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக முதல் சிவ ஆலயமான புதுக்கடை அருகே முஞ்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் வழிபட்டு நேற்று முன் தினம் காலை முதலே பக்தர்கள் ஓட தொடங்கினர்.

காவி வேட்டி மட்டும் அணிந்து, இடுப்பில் துண்டு, கையில் விசிறி, சுருக்கு பையில் விபூதி போன்றவற்றுடன் திருமலை மகாதேவரை தரிசித்த பிறகு கோவிந்தா கோபாலா என்று கோஷமிட்டு நடக்க துவங்கினர். திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு வீரபத்திரர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோயில், பன்னிப்பாகம் சந்திர மவுலீஸ்வரர் கோயில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோயில், மேலாங்கோடு காலகாலர் கோயில், திருவிடைக்கோடு சடையப்பநாதர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில் போன்ற கோயில்களை பகல் மற்றும் இரவில் சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் ஓடியும் நடந்தும் தரிசித்த பக்தர்கள், நேற்று இரவு சிவராத்திரி தினத்தில் நட்டாலம் சங்கர நாராயணனார் கோயிலை வந்தடைந்தனர்....

போட்டோ - http://v.duta.us/MMBBWAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/isLStAAA