🏛உள்மாவட்டங்களில் வழக்கத்தை விட 🌞வெப்பம் அதிகரிக்கும்⏫-வானிலை மையம்🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌞வெப்பச்சலனம் காரணமாக 🏛தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய ☔லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக 😯 வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது🔈. காற்றின் திசை மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது👍. இதனிடையே 🏛தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே இயல்பை விட வெப்பம் அதிகமாக உள்ளது😟. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பநிலை உச்சம்⏫ தொட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்😱 என்றும் வானிலை மையம் தற்போது தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்😐 என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்ஷியஸ்-ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬